மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெர்மனியில் ஹிட்லரின் மாளிகையில் பயங்கர தீ விபத்து: ஒருவர் கைது

ஜெர்மனியில் ஹிட்லரின் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி....

German police detain suspect after fire engulfs Hitler’s Eagle’s Nest

ஹிட்லர் மாளிகை

Published On :24 அக்டோபர் 2026, 7:44 pm IST

ஜெர்மனியில் ஹிட்லரின் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் பவாரியா பகுதியில் உள்ள ஹிட்லரின் வரலாற்று மாளிகையான ‘ஈகிள் நெஸ்ட்’ கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, விடிய விடிய போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,800 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள இந்த மலைப் பகுதிக்குச் சென்று தீயை அணைப்பது மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்திற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சதியாக இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர் தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கும் தீ விபட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

1937 - 1938 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த இடம், இரண்டாம் உலகப் போரின் போது சேதமடையாமல் தப்பியது. பின்னர் இது 1952 முதல் ஒரு உணவகமாகவும், நாஜி வரலாற்றைக் காட்டும் அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது.

Summary

German police have detained a suspect after a fire engulfed the Eagle’s Nest, Adolf Hitler’s notorious Nazi-era mountain retreat in Bavaria, prompting an overnight emergency operation involving about 200 firefighters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.