மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் மனைவியைக் கொன்று விட்டு கணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

சென்னை பாடியில் மனைவியைக் கொன்று விட்டு, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பற்றி...

Man murders wife and dies by suicide by hanging in Chennai

உயிரிழந்த மாலதி, அருண்குமார்.

Published On :24 அக்டோபர் 2026, 6:27 pm IST

சென்னை பாடியில் மனைவியைக் கொன்று விட்டு, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பாடி படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (41). இவரது மனைவி மாலதி (38). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அருண்குமாருக்கு சரிவர வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து மாலதி வீட்டில் தையல் இயந்திரம் மூலம் துணி தைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். குழந்தை இல்லாததாலும், போதிய வருமானமின்றி தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை அருண்குமார், மாலதி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், வீடு பூட்டி கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து, அருண்குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாலதி கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் சடலமாகவும், அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இதன்பிறகு போலீஸார் தம்பதி சடலங்களை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாலதி எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் மாலதி கூறியது, குழந்தை இல்லாததாலும், போதிய வருமானம் இன்றியும் வாழ்ந்து வந்தோம். இதன் காரணமாக எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் கணவர் அருண்குமார், என்னைக் கொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார்.

எங்கள் உயிரிழப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றார். புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து, தம்பதி இறப்பு குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். மனைவியைக் கொன்று விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A man murdered his wife and died by suicide by hanging in Padi, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.