
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!
கோவையில் உள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய். - படம் - எக்ஸ்
கோவையில் உள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ. 3) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார்.
அங்கிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் சாலையில் கூடியிருந்த மக்களின் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 26,000 தொழில் முனைவோருக்கு ரூ. 3,000 கோடி வங்கி நிதி இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவை நிறைவு செய்துவிட்டு, கோவை விமான நிலையம் செல்லும் வழியில் திடீரென கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்ற முதல்வர் விஜய் அங்கு ஆய்வு செய்தார்.
மேலும், காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் விஜய், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் தினசரி வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay conducted a surprise inspection at the Karumathampatti police station in Coimbatore on Tuesday (Nov. 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





