மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்

மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும் என அஸ்ஸாம் முதல்வர் பேசியது குறித்து...

rahul gandhi - assam cm

ராகுல் காந்தி - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 6:06 pm IST

மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை (நவ. 3) தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கடந்த அக். 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் தில்லியில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்பட்டு, அதில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:

ராகுல் காந்தியை பிரதமராக்க சோனியா காந்தி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக கார்கேயின் வீடு ஒரு மாதிரி நாடாளுமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது.

எனவே, மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமராகவும் உண்மையான நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி பிரதமராகவும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Assam Chief Minister Himanta Biswa Sarma stated on Tuesday (Nov. 3) that Rahul Gandhi could become Prime Minister only in a mock parliament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.