மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜம்முவில் பயங்கர தீ விபத்து! 40 கடைகள் எரிந்து நாசம்!

ஜம்மு சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி...

Jammu Fire Accident

ஜம்முவில் பயங்கர தீ விபத்து - PTI

Published On :26 அக்டோபர் 2026, 12:51 pm IST

ஜம்மு ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து நாசமாகின.

ஜம்மு ரயில் நிலையம் அருகேவுள்ள ஷிவ் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புப் படையினர் ஏழு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சந்தைக்குச் செல்லும் வழி மிகவும் குறுகலான பாதையாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் பெரும் சவால் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட கடையை நேரடியாக அடைய முடியாத நிலையில், சந்தையின் பின்பக்கத்திலிருந்து தீயை அணைக்கும் பணிகளை வீரர்கள் மேற்பட்டனர்.

சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக போராடி அதிகாலை 4 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சந்தையிலிருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனத்தை சம்பவ இடத்திலேயே நிலைநிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் சந்தைக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Summary

Major fire in Jammu - 40 shops gutted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.