தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜம்மு ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து: 40 கடைகள் எரிந்து சாம்பல்

ஜம்மு ரயில் நிலையம் அருகே நேரிட்ட பெரும் தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து - சித்திரிப்பு

Published On :27 அக்டோபர் 2026, 3:29 am IST

ஜம்மு ரயில் நிலையம் அருகே நேரிட்ட பெரும் தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து சாம்பலாகின.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் அரசு அதிகாரிகள் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: ஜம்மு ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவலின்பேரில் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீ சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேல் கொழுந்துவிட்டு எரிந்தது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவிலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த 40 கடைகள் எரிந்து சாம்பலாகின. அந்தக் கடைகளில் உணவுப் பொருள்கள், உலா் பழங்கள், கம்பளிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடைகளில் இருந்த பொருள்களின் சேதமதிப்பை கணக்கிடும் பணி நடைபெறுகிறது.

தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை. விபத்து குறித்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், தீ விபத்தில் எரிந்த கடைகளில் ஒரு கடையில் மின்கசிவு காரணமாக முதலில் தீப்பிடித்ததும், பிறகு அந்தத் தீ மற்ற கடைகளுக்குப் பரவியதும் தெரியவந்துள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதி மிகவும் குறுகிய இடமாகும். இதனால் அதை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். கடைகள் இருந்த பகுதிக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அவா்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.