மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உத்தரப் பிரதேசத்தில் ஷஹீத் எக்ஸ்பிரஸ் பெட்டியில் சிறு தீ விபத்து: பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

ஷஹீத் எக்ஸ்பிரஸ் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் சிறு தீ விபத்து குறித்து...

Minor fire breaks out in Shaheed Express coach...

உத்தரப் பிரதேசத்தில் ஷஹீத் எக்ஸ்பிரஸ் பெட்டியில் சிறு தீ விபத்து - எக்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 9:37 am IST

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜீனா ரயில் நிலையம் அருகே ஷஹீத் எக்ஸ்பிரஸ் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் சிறு தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டதாக என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பெட்டிக்கு சிறு சேதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு குமார் தெரிவித்தார்.

நஜிபாபாத்திலிருந்து லக்னௌ நோக்கி ஷஹீத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் எஸ்-6 படுக்கை வசதி கொண்ட பெட்டியில் திடீரென புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டது.

நஜீனா ரயில் நிலையத்திற்கு முன் கோட்வாலி ரயில்வே கிராசிங் அருகே புகையுடன் கூடிய தீப்பிழம்புகளைக் கண்ட பயணிகள், அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு எஸ்-6 பெட்டியில் இருந்த 80 பயணிகளும் உடனடியாக எந்தவித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ரயில்வே நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினரின் விரைவாக நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்-6 பெட்டி முழுவதுமாக காலி செய்யப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று குமார் கூறினார்.

பரேலி ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெட்டிக்கு பதிலாக மற்றொரு பெட்டி மாற்றப்பட்ட பின்னர் அனைத்து பயணிகளுடன் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பரேலியில் ரயில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பெட்டியில் இருந்த சார்ஜிங் சாக்கெட் அருகே ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

A minor fire broke out in a sleeper coach of the Shaheed Express near Nagina in Uttar Pradesh's Bijnor district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.