புதுதில்லி: கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ. 801 கோடியாகப் இருப்பதாக தெரிவித்தது.
நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கி ரூ. 653 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், மார்ச் முடிய வரையான காலாண்டில் வங்கியின் வருமானம் சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 8,137 கோடியாக இருந்த வருமானம், இந்த காலாண்டில் இது ரூ. 7,365 கோடியாகக் குறைந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட இக்காலகட்டத்தில் வங்கியின் வட்டி வருமானம் ரூ. 6,656 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 6,142 கோடியாக இருந்தது.
2026 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் நிகர லாபத்திலிருந்து, ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 0.44 வீதம் ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
2026-27 நிதியாண்டில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, பல்வேறு முறைகள் வாயிலாக, தகுந்த பிரீமியத்துடன், ரூ. 10 முகமதிப்பு கொண்ட 270 கோடி பங்குகளை வெளியிட்டு, மொத்தம் ரூ. 2,700 கோடி பங்கு மூலதனத்தைத் திரட்டும் திட்டத்திற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Summary
UCO Bank on Saturday reported a net profit to Rs 801 crore for the fourth quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஎஃப்எஸ் Q4 நிகர லாபம் 15% உயர்வு!

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 4வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!

சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


