முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேனிலவு கொலை போன்று புணே இளைஞர் கொலை! கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி

புணே கொலையில், முக்கிய கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி பற்றி..

News image

புணே கொலை - file photo

Updated On :1 மணி நேரம் முன்பு

லோஹகத் மலையில் டிரெக்கிங் சென்றிருந்த புனேவைச் சேர்ந்த 25 வயது தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் கொலைச் சம்பவத்தில், கொலையாளியை அடையாளம் காட்டியது அவரது ஹூடிதான் என காவல்துறை விளக்கம்.

அண்மையில் தேனிலவு கொலை போலவே, இந்தக் கொலையும் நடந்துள்ளது.

கேத்தன் அகர்வால் - வருங்கால மனைவியாகவிருந்த சியா கோயல் இருவரும் ஜூன் 18, லோனாவாலா அருகே லோஹாகட் மலைக்கு சென்றபோது இந்தக் கொலை நடந்திருக்கிறது.

மலையேற்றத்தின்போது கால்தவறி கீழே விழுந்து கேதன் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது நண்பர் சேத்தன் சௌத்ரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேத்தன், மிகச் சிறந்த மலையேற்ற பயிற்சி பெற்றவர், அவர் விழுந்த இடத்திலிருந்து கால் தவறி விழ வாய்ப்பேயில்லை என குடும்பத்தார் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து காவல்துறை விசாரணையைத்தொடங்கினர்.

மேலும், கேத்தனின் குடும்பத்தினர், அவரது வருங்கால மனைவியான சியா கோயல் மீது தங்களுக்கு இதுவரை சந்தேகம் வரவில்லை என்றாலும், கொலைக்கு முந்தைய காலகட்டத்தில் அவர் சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதாகக் காவல்துறைக்கு தெரிவித்திருந்ததும் அடிப்படையாக இருந்தது.

அதாவது, ஏற்கனவே இந்த லோஹாகட் மலையேற்றத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அப்போது கேத்தனை அவர் கீழே தள்ளியிருக்கிறார். ஆனால், ​​ஒரு பாம்பிடமிருந்து அவரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாக சியா விளக்கம் அளித்திருந்தாராம்.

அதுபோலவே பாலி செல்ல திட்டமிட்டு, அந்தப் பயணம் கைவிடப்பட்டதால், மீண்டும் லோஹாகட் மலையேற்றத்திற்குச் செல்ல சியா பிடிவாதம் பிடித்தது போன்றவைதான் அவருக்கு எதிரான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன.

கொலையாளி, சேதன் சௌத்ரியுடன் இணைந்து இந்தக் கொலையில் சியாவிற்கும் பங்கு இருக்கலாம் என்ற கேதனின் குடும்பத்தினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின.

மலையேற்றத்தின்போது நுழைவுச் சீட்டு பெறும் இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கேத்தன் - சியா இருவரும் ஒன்றாக செல்வது பதிவாகியிருந்தது.

சற்று இடைவெளியில் ஒருவர் முகம் மறைக்கும்படி ஹூடி அணிந்திருந்தார். இந்த வெய்யில் நேரத்தில் ஹூடி அணிந்து சென்றவர் யார் என விசாரித்தபோது சேதன் என்பது தெரிய வந்தது. அவருடைய செல்போன் எண்ணுக்கு சியா பல நூறு முறை பேசியிருப்பதும், பல மணி நேரங்கள் அந்த அழைப்புகள் நீடித்ததும் விசாரணையில் தெரிய வந்ததும், மர்ம முடிச்சு அவிழ்ந்தது.

இருவரிடமும் முறைப்படி விசாரித்தபோது, அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர். சியா குடும்பத்தினர், கேத்தனை திருமணம் செய்ய பேசியிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சியா, தன்னுடைய காதலன் சேதனை திருமணம் செய்ய வேண்டி, கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டு பல முறை அது தோல்வியடைந்து, ஜூன் 18ஆம் தேதி கொலை செய்திருக்கிறார்கள்.

அண்மையில் திருமணமான பெண், கணவரை தேனிலவு அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், திருமணத்துக்கு முன்பே, மலையேற்றம் அழைத்துச் சென்று மணமகனை காதலனுடன் சேர்த்து சியா கொலை செய்திருக்கிறார்.

Summary

Pune youth murdered! Hoodie led to the killer's exposure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.