தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம், வெள்ளி விலை - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.

சா்வதேச போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது. நேற்று (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று(ஜூன் 24, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Gold, Silver price today in Chennai june 24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.