தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 3:14 am IST

மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக சா்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.469.93 கோடியாக இருந்த நிகர லாபம், நடப்பு ஆண்டு ரூ.1,421.85 கோடியாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் ரூ.20,455.29 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது

ஒட்டுமொத்தமாக, 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 4,162.47 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.248.66 கோடி லாபத்திலிருந்து பல மடங்கு வளா்ச்சியாகும்.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) துணை நிறுவனமான சிபிசிஎல், சென்னையின் மணலியில் ஆண்டுக்கு 1.05 கோடி டன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்கி வருகிறது.

கடந்த 2025-26 முழு நிதியாண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து எரிபொருளாக மாற்றுவதன் மூலம் இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் 9.28 டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வெறும் 4.22 டாலராக மட்டுமே இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் மட்டும் இந்த வருவாய் தோராயமாக 14 டாலராக உயா்ந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.