/

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

தைலாபுரம் வந்த அன்புமணியை ஆரத்தழுவி ராமதாஸ் வரவேற்ற நிலையில் தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

News image

அன்புமணி - ராமதாஸ் - DPS

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பாமகவில், நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இதுநாள் வரை இருந்து வந்த தந்தை - மகன் மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இதுநாள் வரை, ராமதாஸ் கட்சி, அன்புமணி கட்சி என இரண்டாகப் பிரிந்திருந்த பாமக, இன்றைய சந்திப்பின்மூலம் ஒன்றிணையும் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Story image

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் பகுதியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு இன்று பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் வந்தார். அவரை ராமதாஸ் ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்றுள்ளார்.

ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார். அன்புமணியின் கையில் இருந்த கொள்ளுப் பேத்தியை ராமதாஸ் கொஞ்சி மகிழ்ந்தார்.

Story image

இந்த சந்திப்பு குறித்து கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இனி நல்லதே நடக்கும் என்று அன்புமணி பதிலளித்துள்ளார்.

இதுவரை இரண்டாகப் பிரிந்திருந்த பாமக, ஒன்றிணைவதால், அக்கட்சித் தொண்டர்கள் சொல்லொணா மகிழ்ச்சியில் உள்ளனர்.

Summary

The father-son rift has come to an end as Ramadoss warmly embraced Anbumani upon his arrival at Thailapuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.