புதுதில்லி: 2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டில், சவுத் இந்தியன் வங்கி தனது நிகர லாபம் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 407.50 கோடியை ஈட்டியுள்ளதாக வங்கி இன்று அறிவித்தது.
தனியார் துறை வங்கியின் நிகர லாபம், மார்ச் காலாண்டில் ரூ. 342.19 கோடியாக இருந்தது. 2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், சவுத் இந்தியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 407.50 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 2,946 கோடியாக இருந்தது.
2025-26 முழு நிதியாண்டுக்கும் சேர்த்து, வங்கி ரூ. 1,455 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் ஈட்டிய ரூ. 1,303 கோடியை விட இது 12 சதவீதம் அதிகமாகும்.
வங்கியின் மொத்தக் கடன் வழங்கல் 2026 நிதியாண்டில் 14.50 சதவீதம் உயர்ந்து ரூ. 1 லட்சம் கோடியை எட்டியது. கடந்த நிதியாண்டில் இது ரூ. 87,579 கோடியாக இருந்தது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான, தலா ரூ. 1 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 0.45 ஈவுத்தொகை வழங்குமாறு வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், சவுத் இந்தியன் வங்கியின் பங்குகள் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 3.81 சதவீதம் உயர்ந்து ரூ. 42.51ஆக நிறைவடைந்தன.
Summary
South Indian Bank reported a 19 per cent growth in net profit at Rs 407.50 crore in the March quarter of 2025-26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

லிபர்ட்டி ஷூ: Q4 நிகர லாபம் 5.5% சரிவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


