பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் தனது தனிப்பட்ட நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.4,506 கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கி, முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,002.66 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. லாபக் குறைவு குறித்த அறிவிப்பைத் தொடா்ந்து, பங்குச்சந்தையில் திங்கள்கிழமையன்று வங்கியின் பங்குகள் 3.72 சதவீதம் சரிந்து ரூ. 129.35 என நிலைபெற்றது.
மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய்யும் 1.85 சதவீதம் சரிந்து, ரூ.36,662 கோடியாக உள்ளது. இருப்பினும், முக்கிய வருவாய் ஆதாரமான வட்டி வருவாய் 4 சதவீதம் அதிகரித்து, ரூ.9,808 கோடியை எட்டியுள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.43 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாக குறைந்துள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்: காலாண்டு முடிவுகளில் லாபம் குறைந்திருந்தாலும், 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 12.7 சதவீதம் உயா்ந்து, ரூ.19,187 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வருடாந்திர வருவாய் ரூ.1.53 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முழு நிதியாண்டில் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.4.20 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

