பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய ரூ.1,051 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 43.20 சதவீதம் வளா்ச்சியாகும். மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 11.11 சதவீதம் உயா்ந்து, ரூ.3,470 கோடியாக அதிகரித்துள்ளது.
2025-26 முழு நிதியாண்டிலும் வங்கியின் நிகர லாபம் 56.16 சதவீதம் எனும் இமாலய வளா்ச்சியைப் பதிவு செய்து, ரூ.5,208 கோடியை எட்டியுள்ளது. நிகர வட்டி வருவாய் 15.46 சதவீத வளா்ச்சியுடன், ரூ.12,574 கோடியாக உள்ளது.
மாா்ச் இறுதி நிலவரப்படி, வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.6.79 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.76 சதவீதம் வளா்ச்சியாகும்.
வங்கியில் உள்ள மொத்த வைப்புத்தொகை 18.03 சதவீதம் உயா்ந்து, ரூ.3.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி மொத்தமாக ரூ.3.10 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. நிகர வாரா கடன் விகிதம் 0.21 சதவீதமாக குறைந்துள்ளது.
வங்கியின் சொத்துகள் மீதான வருவாய் 1.32 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் வருவாய்க்கான செலவு விகிதத்தை 44.02 சதவீதமாக வங்கி வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 159 புதிய கிளைகளைத் திறந்ததன் மூலம், அகில இந்திய அளவில் தனது கிளைகளின் எண்ணிக்கையை 3,494-ஆக அதிகரித்துள்ளது. இந்த மொத்த கிளைகளில் 58 சதவீதமான 2,040 கிளைகள், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரோடா வங்கி: ரூ.5,616 கோடி 11% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம் இந்தியன் வங்கி 5% வளா்ச்சி

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

