மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!

ஸ்ரீரங்கம் தொகுதியின் 91-வது வாக்குச்சாவடியில் திமுகவினரே அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை எனத் தகவல்

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 11:03 am IST

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 நிர்வாகிகளை திமுக நியமித்த நிலையில், ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்குச் சாவடியில் வெறும் 5 வாக்குகள் பதிவானதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,87,027 வாக்காளர்கள் உள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 2,55,293 பேர் வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதியில் தவெக வேட்​பாளர் ரமேஷ் 1,03,235 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மேலும், திமுகவின் துரை​ராஜ் 69,645 வாக்​கு​களும், அதி​முகவின் மனோகரன் 65,819 வாக்​கு​களும் பெற்​றனர்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91 ஆவது வாக்​குச்​சாவடி​யில் திமுக வேட்​பாளருக்கு 5 வாக்​குகள் மட்​டுமே கிடைத்துள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை நியமித்ததாக திமுக கூறும்நிலையில், 91 ஆவது வாக்குச்சாவடியில் அக்கட்சிக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, அவர்களின் கட்சியினரே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று பொருளாகிறது.

இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறியதாவது, கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களே வாக்களிக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Summary

TN Polls 2026: DMK secures only 5 votes at a polling station in Srirangam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.