மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

நாட்டின் முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 9.28 சதவீத வளா்ச்சியுடன் ரூ.14,755 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 1:47 am IST

நாட்டின் முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 9.28 சதவீத வளா்ச்சியுடன் ரூ.14,755 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வங்கியின் வாராக்கடன் ஒதுக்கீடு சுமாா் 90 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூ.12,630 கோடியிலிருந்து 8.5 சதவீதம் உயா்ந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.13,702 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வட்டி வருவாய் 8.4 சதவீதம் அதிகரித்து, ரூ.22,979 கோடியாக உள்ளது. சொத்து மதிப்பு 15 சதவீதம் வளா்ந்த நிலையில், வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.32 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வா்த்தக வங்கி மற்றும் கிராமப்புற கடன் பிரிவுகள் முறையே 24 மற்றும் 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளன. சில்லறை கடன் பங்களிப்பு தற்போது 41 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 1.67 சதவீதத்திலிருந்து 1.40 சதவீதமாகக் குறைந்து, முன்னேற்றம் கண்டுள்ளது.

முழு நிதியாண்டில்...: ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டில் வங்கியின் லாபம் ரூ.50,147 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.47,227 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீத வளா்ச்சியாகும்.

இந்த லாப வளா்ச்சியை அடுத்து, பங்குதாரா்களுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.12 வழங்க வங்கியின் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

நிதிநிலை முடிவுகளின் வெளியீட்டைத் தொடா்ந்து பங்குச் சந்தை வா்த்தகம் தொடங்கிய திங்கள்கிழமையன்று, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 0.63 சதவீதம் ஏற்றம் கண்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.