மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? என திமுக கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

சிறப்பு வில்லை - படம் - எக்ஸ் (திமுக)

Published On :21 அக்டோபர் 2026, 8:28 pm IST

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? என திமுக புதன்கிழமை (அக். 21) கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று நடைபெற்ற காவல்துறை கொடி நாளின் போது, தமிழ்நாடு காவலர்கள் தங்கள் சீருடையில் அணியும் சிறப்பு வில்லையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, ஹிந்தியும் ஆங்கிலமும் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “ஹிந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?

காவல் துறை கொடி நாளில், ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள வில்லை-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் மத்திய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.

குறிப்பு: பல ஆண்டுகளாக மத்திய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது! என்று திமுக குறிப்பிட்டுள்ளது.

Summary

Is there no place for Tamil in the Tamil Nadu Police? The DMK raised the question on Wednesday (Oct. 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.