மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக திட்டங்களால் பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்! உதயநிதி பெருமிதம்!

ஆசிய பாரா விளையாட்டில் அசத்தும் வீரர்களுக்கு உதயநிதி பாராட்டு...

udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 10:41 am IST

திமுகவின் பல்வேறு திட்டங்களால் இந்தியாவுக்காக தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை (அக். 22 காலை 10 மணி வரை) 62 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர்.

இந்த நிலையில், பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் சோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu athletes are accumulating medals thanks to DMK Schemes - Udhayanidhi proud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.