மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேட்மிண்டனில் வெண்கலம்: தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஆசிய பாரா விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு தமிழக அரசு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நவீன் சிவகுமார்

Published On :22 அக்டோபர் 2026, 8:19 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின.

இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதில், கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு தமிழக அரசு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.

வீரர் நவீன் சிவகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. 

இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Bronze in badminton: Tamil Nadu player Naveen Sivakumar gets Rs. 30 lakh incentive!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.