மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு 20-வது தங்கம்! 400மீ தடகளத்தில் அசத்திய திலீப் காவிட்!

ஆசிய பாரா விளையாட்டில் 400மீ தடகளத்தில் திலீப் காவிட் தங்கப் பதக்கம் வென்றார்.

திலீப் காவிட்

Published On :22 அக்டோபர் 2026, 4:54 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் 400மீ தடகளத்தில் திலீப் காவிட் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின.

இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆண்களுக்கான 400 மீட்டர் T47 பிரிவில் திலீப் காவிட் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

48.27 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து திலீப் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது, இந்தியாவுக்கு 20-வது தங்கப் பதக்கம்.

தனது அசாத்திய திறமையால் திலீப் முதலிடம் பிடித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக சக இந்திய வீரரான பாவிக் குமார் பர்வாட் 49.31 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏற்கனவே 100மீ தடகளத்தில் திலீப் காவிட் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இது அவருக்கு இரண்டாவது தங்கமாகும்.

இந்தியா பதக்கப் பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

Summary

India's 20th gold! Dilip Kavit shines in the 400m!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.