மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு 5-வது தங்கம்: ஆசிய பாரா விளையாட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி ஜீவன்ஜி!

ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவிற்கு 5-வது தங்கப் பதக்கத்தை தீப்தி ஜீவன்ஜி வென்றுள்ளார்.

தீப்தி ஜீவன்ஜி

Published On :20 அக்டோபர் 2026, 3:12 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவிற்கு 5-வது தங்கப் பதக்கத்தை தீப்தி ஜீவன்ஜி வென்றுள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டில் 400மீ டி20 தடகளத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 23 வயதான தீப்தி ஆசிய பாரா விளையாட்டில் 400மீ தடகளத்தில் 56.36 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

போட்டி தொடங்கிய இரண்டாவது நாளில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள 5-வது தங்கப் பதக்கம் இது.

ஏற்கனவே தகுதிச் சுற்றின்போது 57.57 வினாடிகளில் ஓடி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய சாதனையை தீப்தி முறியடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இறுதிச்சுற்றில் ஒரு விநாடிக்கும் மேல் தனது ஓட்ட நேரத்தைக் குறைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டாமிடம் பிடித்த ஜப்பானின் நீனா கன்னோவை விட 2.5 விநாடிகள் முன்னதாக தீப்தி பந்தய தூரத்தைக் கடந்துள்ளார்.

பாரா தடகளத்தின் டி 20 பிரிவு என்பது, அறிவுசார் குறைபாடுகள் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கானதாகும்.

அறிவுசார் குறைபாடு காரணமாக விளையாட்டு வீரர்கள் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, கவனத்தைப் பேணுவதில் அடிக்கடி தடைகளைச் சந்திப்பார்கள். அதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு இப்போட்டியில் தீப்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

5th gold for India: Deepti Jeevanji sets a new record in the Asian Para Games!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.