பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்க வேட்டையில் இந்தியா! ஆசிய பாரா விளையாட்டில் குவியும் பதக்கங்கள்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

பிரணவ் சூர்மா / நிஷாத் குமார் / தேவேந்திர குமார்

Published On :20 அக்டோபர் 2026, 6:20 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், இன்று ஒரு நாளில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களையும், மொத்தமாக இதுவரை 9 தங்கப் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளது.

வட்டு எறிதல் (F51/52/53 பிரிவு)

ஆண்கள் வட்டு எறிதல் போட்டியின் ஒருங்கிணைந்த F51/52/53 பிரிவில் பிரணவ் சூர்மா தங்கப் பதக்கத்தை வென்றார். 32 வயதான சூர்மா தனது நான்காவது முயற்சியில் 11.66 மீட்டர் தூரம் வட்டை எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.

அதேநேரம், மற்றொரு இந்திய வீரரான 31 வயதான ராம் ரத்தன் சிங் தனது இரண்டாவது முயற்சியில் 10.35 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று இரண்டாமிடம் பிடித்தார்.

இதன்மூலம், வட்டு எறிதல் போட்டியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

வட்டு எறிதல் (F43/F44/F62/F64 பிரிவு)

ஆண்கள் வட்டு எறிதல் போட்டியின் ஒருங்கிணைந்த F43/F44/F62/F64 பிரிவில் இந்தியாவின் தேவேந்திர குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

F44 பிரிவில் பங்கேற்ற தேவேந்தர் தனது இரண்டாவது முயற்சியில் 49.71 மீட்டர் தூரம் வட்டை எறிந்து (781 ரசா புள்ளிகளுடன்) தங்கப் பதக்கத்தை வென்று முதலிடம் பிடித்தார்.

இப்போட்டியில், அதிரடியாக இந்தியாவின் ராகேஷ் மற்றும் பிரதீப் குமார் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று போட்டியைக் கைப்பற்றினர்.

F44 பிரிவில் பங்கேற்ற ராகேஷ் 49.45 மீட்டர் தூரம் வட்டை எறிந்து மற்றும் (771 ரசா புள்ளிகளுடன்) இரண்டாமிடம் பெற்றார்.

F64 பிரிவில் பங்கேற்ற பிரதீப் குமார் 51.15 மீட்டர் தூரம் வட்டை எறிந்து மற்றும் (669 ரசா புள்ளிகளுடன்) மூன்றாமிடம் பிடித்தார்.

உயரம் தாண்டுதல் T47

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் T47 பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.04 மீ உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த அபாரமான வெற்றியின் மூலம், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவர் புதிய சாதனை படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவரின் தங்கப் பதக்கத்துடன் இந்தியா மொத்தமாக 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

முன்னதாக, இந்தியா சார்பில் இன்று மகளிர் 200 மீட்டர் T12 போட்டியில் தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மா தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல, 400மீ டி20 தடகளத்தில் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இன்று ஒரே நாளில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India in the hunt for gold! Medals pile up at the Asian Para Games!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.