ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 4 தங்கம் வென்று, இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறித்து...

Medalists

பதக்கம் வென்ற ரிங்கு ஹூடா, சௌமியா, ராதா வெங்கடேஷ். - படம் - எக்ஸ்

Published On :19 அக்டோபர் 2026, 7:03 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் 4 தங்கம் வென்று, பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நேற்று (அக். 18) தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த விளையாட்டில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 போட்டியில் இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 250 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று கணக்கைத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஆடவர் நீளம் தாண்டுதலில் நிஷாத் குமார், மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சௌமியா, ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ரிங்கு ஹூடா ஆகியோர் தங்கத்தை வென்றனர்.

இதேபோன்று, பல போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் இந்திய வீரர் வீராங்கனைகள் வென்றனர்.

இதன் விளைவாக முதல் நாளின் முடிவில் 4 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று புள்ளிப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 62 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India has won 4 gold medals at the Asian Para Games, finishing fourth in the medal tally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.