பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது குறித்து...

Nishad Kumar

நிஷாத் குமார். - படம் - எக்ஸ்

Published On :19 அக்டோபர் 2026, 4:23 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளது.

ஆசியப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, அதன் பாரா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நேற்று (அக். 18) தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் 7.11 மீட்டர் தூரம் தாண்டி, இந்திய வீரரான நிஷாத் குமார் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியின் முதல் முயற்சியில் 6.95 மீட்டரில் தொடங்கி, தனது இரண்டாவது முயற்சியில் அதை 7.09 மீட்டராக நிஷாத் குமார் அதிகரித்தார். பின்னர், மூன்றாவது சுற்றில் 7.11 மீட்டரைப் பதிவுசெய்து நிஷாத் குமார் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், மொத்தம் ஆறு பதக்கங்களைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India has won its second gold at the Asian Para Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.