மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2 தங்கம் வென்று வரலாறு படைத்த நிஷாத் குமார்..! நேற்று நீளம் தாண்டுதலில், இன்று உயரம் தாண்டுதலில்!

ஆசிய பாரா விளையாட்டில் இரண்டாவது தங்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமார் குறித்து...

Nishad Kumar in the joy of victory

வெற்றிக் களிப்பில் நிஷாத் குமார் - படம்: எக்ஸ் / டிடி ஸ்போர்ட்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 6:26 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் நிஷாத் குமார் உயரம் தாண்டுதலில் இரண்டாவது தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்தியா மொத்தமாக இதுவரை 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.

இதற்கு முன்பாக இரண்டு இந்தியர்கள் ஒரே எடிஷனில் இரண்டு தங்கம் வென்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் நிஷாத் குமார் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த பாரா ஆசிய விளையாட்டில் திங்கள் கிழமை நீளம் தாண்டுதலில் நிஷாத் குமார் தங்கம் வென்றிருந்தார். தற்போது இன்று உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார்.

ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதல் நிஷாத் குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இதில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். 2.04 மீட்டருக்கு உயரம் தாண்டி இந்தப் பிரிவில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டி47 என்பது கைகளின் குறைபாடு கொண்ட தடகள வீரர்களைக் குறிக்கும் வார்த்தையாகும். இந்தப் பிரிவில்தான் நிஷாத் குமார் சாதனை படைத்துள்ளார்.

நிஷாத்தின் வலது கை 6 வயதில் புல் வெட்டும் இயந்திரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு விவாசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Nishad Kumar bags second gold, becomes third Indian to do so in single Asian Para Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.