மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதம்: வரலாற்றுச் சாதனை படைத்த டெம்பா பவுமா!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் வரலாற்றுச் சதம் குறித்து...

South Africa's captain Temba Bavuma celebrates after hitting a century on day three of the second cricket test match between South Africa and Australia, in Gqeberha, South Africa, Tuesday, Oct. 20, 2026. (AP Photo/Themba Hadebe)

சதம் அடித்த மகிழ்ச்சியில் டெம்பா பவுமா - படம்: ஏபி

Published On :20 அக்டோபர் 2026, 5:52 pm IST

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

'கிகெபெர்ஹா’ திடலில் முதல் முறையாக சதம் அடித்த கேப்டனாகவும் பவுமா சாதனை படைத்துள்ளார். முன்னதாக, 1992ல் இந்தியாவுக்கு எதிராக கெப்லர் வெஸ்ஸல்ஸ் 95 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இரண்டாவது டெஸ்ட்டில் முதலிரண்டு நாள்களில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறி வந்தது. பொறுமையாக விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 226 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதம் அடித்த பவுமாவுக்கு இது மொத்தமாக ஐந்தாவது சதம் என்பதும் நினைவுகூரத்தக்கது. 'கிகெபெர்ஹா’ திடலில் முதல்முறையாக ஒரு கேப்டனாக சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஐந்து சதத்தில் நான்கு சதங்கள் கேப்டனாக இருக்கும்போது அடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. தற்போது, 92 ஓவர்களில் தெ.ஆ. அணி 284 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

கேப்டன் டெம்பா பவுமா 108* ரன்களுடனும் ஷிமோன் ஹார்மர் 17* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். முதல் டெஸ்ட்டில் தோற்ற தெ.ஆ. அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

Summary

First century against Australia: Temba Bavuma creates history!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.