மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜய் அண்ணா... முதல்வருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தமிழக வீராங்கனை!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா பகிர்ந்த பதிவு குறித்து...

Bharanika Elangovan with the Chief Minister of Tamil Nadu

தமிழக முதல்வருடன் பரணிகா இளங்கோவன் - படங்கள்: இன்ஸ்டா / பரணிகா

Published On :20 அக்டோபர் 2026, 4:10 pm IST

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா முதல்வர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “முதல்வர் விஜய்யின் கனிவு இந்தத் தருணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் அண்ணா என அன்பாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய அணி 85 பதக்கங்களுடன் நிறைவு செய்தது. அதில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் பலரும் பதக்கம் வென்றிருந்தார்கள்.

குறிப்பாக போல் வால்ட் பிரிவில் பரணிகா இளங்கோவன் முதல்முறையாக இந்திய வரலாற்றில் இந்தப் பிரிவில் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தமிழக வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி முதல்வர் விஜய் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுப் பொருள்களையும் வழங்கி சமீபத்தில் கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் பரணிகா எடுத்த செல்ஃபி மற்றும் மற்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வருக்கு நன்றி. அவரது கனிவினால் இந்தத் தருணம் மேலும் சிறப்பாக மாறியது. உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தது விஜய் அண்ணா! உங்களின் வரவேற்பும் ஊக்கமும் ஆதரவும் மிகவும் முக்கியமானது. இந்தச் சிறப்பான மறக்க முடியாத தருணத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

Summary

This shows his kindness... Tamil Nadu sportswoman shares photos taken with Chief Minister Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.