மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரட்டை சதத்தை தவறவிட்ட பவுமா: 422 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் குறித்து...

South Africa's captain Temba Bavuma celebrates after hitting a century on day three of the second cricket test match between South Africa and Australia, in Gqeberha, South Africa, Tuesday, Oct. 20, 2026. (AP Photo/Themba Hadebe)

சதம் அடித்த மகிழ்சியில் டெம்பா பவுமா - படம்: ஏபி

Published On :20 அக்டோபர் 2026, 9:41 pm IST

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாளில் 12.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அதில் தென்னாப்பிரிக்கா 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாம் நாள் முடிவில் தெ.ஆ. 43 ஓவர்களில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாவது நாளில் 425 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இந்தப் போட்டியில் கேப்டன் டெம்பா பவுமா 334 பந்துகளில் 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் மார்கோ யான்சென் 85, ஷிமோன் ஹார்மெர் 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 5, மிட்செல் ஸ்டார்க் 3, மார்னஸ் லபுஷேன் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். தற்போது, ஆஸி. அணி 422 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் நிக் மேடின்சன் டக் அவுட்டானார். ககிசோ ரபாரா இவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

Summary

Bavuma misses out on a double century; Australia trails by 422 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.