மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவுமாவின் நிதானம், யான்செனின் அதிரடியால் மீண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...

South Africa's Marco Jansen celebrates his 50 runs on day three of the second cricket test match between South Africa and Australia, in Gqeberha, South Africa, Tuesday, Oct. 20, 2026. (AP Photo/Themba Hadebe)

அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் டெம்பா பவுமா, மார்கோ யான்சென் - படங்கள்: ஏபி

Published On :20 அக்டோபர் 2026, 3:39 pm IST

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்றாம் நாளில் மழையின் குறுக்கீடு இல்லாமல் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாளில் 12.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அதில் தென்னாப்பிரிக்கா 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாம் நாள் முடிவில் தெ.ஆ. 43 ஓவர்களில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாவது நாளில் சிறப்பாக விளையாடி வருகிறது.

கேப்டன் டெம்பா பவுமா 189 பந்துகளில் 76 ரன்களும் மார்கோ யான்சென் 71 பந்துகளில் 72 ரன்களும் எடுத்துள்ளார்கள். மதிய உணவு இடைவேளையில் 72 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 216 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலாண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். மாட் ரென்ஷா எடுத்த விக்கெட் நடுவர் ரிவிவ் மூலமாக மாற்றப்பட்டது.

இரண்டு நாள்களாக தடுமாறி வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு பவுமா - யான்சென் கூட்டணி நம்பிக்கையை அளித்துள்ளது.

Summary

South Africa recovers, thanks to Bavuma’s composure and Jansen’s explosive play!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.