மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி நாள்: சமன் செய்யுமா ஆஸி.? தென்னாப்பிரிக்காவுக்கு 6 விக்கெட்டுகள் தேவை!

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி நாள் குறித்து...

Australia's Scott Boland, center left, and teammate Travis Head, center right, leave the field at the end of day's play on day four of the second cricket test match between South Africa and Australia, in Gqeberha, South Africa, Wednesday, Oct. 21, 2026. (AP Photo/Themba Hadebe)

நான்காம் நாள் இறுதியில் பெவிலியன் திரும்பும் ஆஸி. வீரர்கள். - படம்: ஏபி

Published On :22 அக்டோபர் 2026, 1:33 pm IST

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால், ஃபாலோ ஆன் முறையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய தெ.ஆ. கேப்டன் பணித்தார்.

இந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 170 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. மீதமிருக்கும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவினால் இந்தப் போட்டியில் வெல்வது மிகக் கடினம். சமன்செய்ய போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் ஆஸி.க்கு இந்தப் போட்டியில் தோல்வி கிடைத்தால் 1-1 என சமனாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக நான்காம் நாளில் இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடவில்லை. கடைசி நாளில் அவரது ஆட்டத்தைப் பொறுத்தே முடிவு தீர்மானிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

South Africa needs 6 wickets to win the match..! Can Aussies equalize?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.