தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு 15ஆவது தங்கம்..! வீராங்கனை சுவர்ணா ராஜ் அசத்தல்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை குறித்து...

Suvarna Raj

சுவர்ணா ராஜ் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 12:05 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சுவர்ணா ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 15ஆவது தங்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மகளிருக்கான எஃப்54 வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சுவர்ணா ராஜ் தனது ஐந்தாவது முயற்சியில் அதிகபட்ச தூரமான 15.66 மீட்டருக்கு வட்டு எறிந்து தங்கம் வென்றார்.

தனது முதல் நான்கு முயற்சிகளிலும் 15 மீட்டருக்கு அதிகமாக வட்டு எறிந்த சுவர்ணா ராஜ் ஐந்தாவது முயற்சியில் தனது அதிகபட்ச தூரத்தை அடைந்தார்.

ஈரானின் ஷாஹ்லா ஹதிதி 15.45 மீட்டருக்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கமும் வியத்நாமின் தி கோச் து கோயேன் 14.65 மீட்டருக்கு எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.

இந்தியா நேற்றுடன் 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் வென்றிருந்தார்கள். தற்போது. இந்தியாவுக்கு 15ஆவது தங்கம் கிடைத்துள்ளது.

F54 வகை வீரர்களுக்குக் கைகளில் மேல் தசையில் முழுமையான வலிமையும், உடலில் பகுதியளவு முதல் முழுமையான தசை வலிமையும் இருக்கும். ஆனால், நடு உடற்பகுதி மற்றும் கால்களின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

India's Suvarna Raj wins gold medal in women's discus throw F54 event at Asian Para Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.