மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாட்மின்டனில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்!

ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் குறித்து...

Thulasimathi Murugesan

துளசிமதி முருகேசன் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 11:57 am IST

ஆசிய பாரா விளையாட்டில் பாட்மின்டன் ஒறையர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். இன்றைய நாளின் முதல் பதக்கமாக துள்சிமதி வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த (காஞ்சிபுரம்) துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் பாட்மின்டன் எஸ்யு5 பிரிவில் வெள்ளி வென்றார். இவர் சீன வீராங்கனையிடம் 0–2 (18–21, 11–21) என்ற கேம்களில் தோல்வியுற்றார்.

இதனால் சீன வீராங்கனை யாங் க்கியூக்ஸிங் தங்கப் பதக்கமும் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும் வென்றார்கள்.

முன்னதாக, தமிழக பாட்மின்டன் வீரர் நவீன் சிவக்குமார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய முடிவில் இந்திய அணி 88 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் இருந்தது. இன்றும் பதக்க வேட்டையில் இந்திய அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

Thulasimathi Murugesan secured Silver in Women’s Singles asian para games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.