மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு 16ஆவது தங்கம்..! வில்வித்தையில் உலக சாதனை படைத்த ஷீத்தல் தேவி, தோமன் குமார்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்கள் குறித்து...

India's Sheetal Devi and Toman Kumar

தோமன் குமார், ஷீத்தல் தேவி - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 12:38 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கலப்பு இரட்டையர்கள் ஷீத்தல் தேவி, தோமன் குமார் இணைந்து வில்வித்தையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பாரா வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் 151-148 புள்ளிகள் பெற்று இந்தோனேஷியாவின் தியோடோரா ஆடி ஆயுடியா ஃபெரெல்லி மற்றும் கென் ஸ்வாகுமிலாங் இணையை வீழ்த்தி தங்கம் வென்றார்கள்.

தங்கம் வென்ற இந்தியர்கள் தகுதிச் சுற்றில் தொடர்ச்சியாக இலக்கை துல்லியமாக தாக்கி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் 38-37 என்றிருந்தனர், பின்னர் 77-73 என முன்னேறினர். இறுதியில் 151-148 என வென்றனர்.

இந்தப் பிரிவில் இந்தியர்கள் ஷீத்தல் தேவி, தோமன் குமார் மொத்தமாக 1,402 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்கள். முன்னதாக 1400 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது.

ஷீத்தல் தேவி கைகள் இல்லாமல் பிறந்தவர். அவர் தனது கால்கள், தோள் பட்டைகளை வைத்து வில்வித்தையில் தங்கம் வென்றுள்ளதும் பாராட்டத்தக்கது.

Summary

இந்தியாவுக்கு 15ஆவது தங்கம்..! வீராங்கனை சுவர்ணா ராஜ் அசத்தல்!India's Sheetal Devi and Toman Kumar clinch compound mixed team gold at Asian Para Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.