மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!

இந்தியாவின் நட்சத்திர பாரா ஓட்டப்பந்தய வீராங்கனையான சிம்ரன் ஷர்மா ஆசிய பாரா விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

சிம்ரன் ஷர்மா

Published On :20 அக்டோபர் 2026, 5:15 pm IST

இந்தியாவின் நட்சத்திர பாரா ஓட்டப்பந்தய வீராங்கனையான சிம்ரன் ஷர்மா ஆசிய பாரா விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் T12 போட்டியில் தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மா, 24.80 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

(T12 பிரிவு என்பது மிதமான பார்வைக் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.)

இவருக்கு அடுத்து ஈரானின் ஹஜார் சஃபர்சாதே 25.02 விநாடிகளில் இரண்டாம் இடம்பிடித்த நிலையில், 25.23 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இந்தியாவின் தேஜல்பன் டாமோர் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், 200மீ தடகளத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தேஜல்பன் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

தேஜல்பன் டாமோர்

தேஜல்பன் டாமோர்

2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிம்ரன், ஆசியப் போட்டிகளில் 24.46 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனால், இந்த முறை அவரது சாதனையை அவரே முறியடிக்கவில்லை.

Summary

India's star para-runner Simran Sharma stunned the world by winning a gold medal at the Asian Para Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.