மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதலில் இந்தியா இரு பதக்கங்களை வென்றுள்ளது.

பிரதீப் குமார் / ஆயுஷ் வர்மா

Published On :20 அக்டோபர் 2026, 4:10 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதலில் இந்தியா இரு பதக்கங்களை வென்றுள்ளது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரதீப் குமார் - வெள்ளி

இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F53/54 பிரிவில் இந்தியாவின் பிரதீப் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரதீப் குமார் (F54) 27.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது தனிப்பட்ட சிறப்பான சாதனையைப் படைத்து இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

ஆயுஷ் வர்மா - வெண்கலம்

இவரைத் தொடர்ந்து, ஆயுஷ் வர்மா (F53) வெண்கலப் பதக்கம் வென்று ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு இரட்டைப் பதக்கத்தை உறுதி செய்தார். ஒப்பீட்டளவில் அவர் 17.88 மீட்டர் என்ற குறைந்த தூரமே ஈட்டியை எறிந்தபோதிலும், உடல் குறைபாடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் ரசா புள்ளிகளின் அடிப்படையில் ஆயுஷுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

இப்போட்டியில், ஈரானின் எர்ஃபான் போண்டோரி, 30.24 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

நாளை (அக். 21) நடைபெறவுள்ள ஆடவர் குண்டு எறிதல் F53 இறுதிப் போட்டியிலும் ஆயுஷ் வர்மா போட்டியிடவுள்ளார்.


F53 மற்றும் F54 பிரிவுகள் என்றால் என்ன?

F53 வகை விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாக கைகளின் செயல்பாடு முழுமையாக இருக்கும். ஆனால் வயிற்றுத் தசைகள் மற்றும் கீழ் முதுகுத்தண்டு தசைகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால், அவர்களால் சமநிலையாக உட்கார முடியாது.

F54 வகை வீரர்களுக்குக் கைகளில் மேல் தசையில் முழுமையான வலிமையும், உடலில் பகுதியளவு முதல் முழுமையான தசை வலிமையும் இருக்கும். ஆனால், நடு உடற்பகுதி மற்றும் கால்களின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.

Summary

India has won two medals in javelin throw at the Asian Para Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.