தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஆசிய பாரா விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் மேலும் இரு பதக்கங்களை வென்ற இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் இரு பதக்கங்களை வென்றுள்ளது.

மனிஷ் நர்வால் / ஸ்ரிஷ்டி அரோரா

Published On :20 அக்டோபர் 2026, 1:58 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் இரு பதக்கங்களை வென்றுள்ளது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மனிஷ் நர்வால் - வெள்ளி

இதில், துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் இந்தியாவின் மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற வீரரான மனிஷ் நர்வால், 8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் 233.7 புள்ளிகள் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ஸ்ரிஷ்டி அரோரா - வெண்கலம்

அதேபோல, துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் இந்தியாவின் ஸ்ரிஷ்டி அரோரா வெண்கலம் வென்றுள்ளார்.

8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் 214.7 புள்ளிகள் பெற்ற ஸ்ரிஷ்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

துப்பாக்கி சுடுதலில் 4 பதக்கங்கள்

இதனைத் தொடர்ந்து, ஆசிய பாரா விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

நேற்று (அக். 19) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 பிரிவில் இந்தியா முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது. இதில், மோனா அகர்வால் தங்கப் பதக்கமும், அவனி லெகாரா வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

SH1 பிரிவு என்றால் என்ன?

SH1 பிரிவு என்பது, கைகளின் கீழ் அல்லது மேல் மூட்டுகளில் குறைபாடுள்ள மற்றும் உதவியின்றித் தங்கள் துப்பாக்கியைப் பிடிக்கக்கூடிய மாற்றுத்திறனாளித் துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கானது.

இந்தப் பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தங்கள் துப்பாக்கியின் எடையைத் தாங்குவதற்கான தனி ஸ்டாண்ட் தேவையில்லை.

Summary

Asian Para Games: India wins two more medals in shooting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.