ஆசிய பாரா விளையாட்டு: பளு தூக்குதலில் இந்தியாவின் அசோக் வெள்ளி வென்றார்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதல் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அசோக் வெள்ளி வென்றார்.

பளு தூக்குதல் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அசோக் வெள்ளி வென்றார் - PTI

Published On :20 அக்டோபர் 2026, 1:15 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதல் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அசோக் வெள்ளி வென்றார்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், இன்று நடைபெற்ற ஆண்கள் 65 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் அசோக் (37) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.

216 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்ற சீனாவின் ஸோ யீ-க்கு அடுத்ததாக, 192 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் அசோக் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி வென்றுள்ளார்.

இந்தோனேசியாவின் மார்கோனோ 177 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 தனது முதல் முயற்சியில் 187 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கிய அசோக், இரண்டாவது முயற்சியில் 192 கிலோவைத் தூக்கினார். கடைசி முயற்சியில் 201 கிலோவைத் தூக்குவதில் அவர் தோல்வியடைந்தார்.

ஹரியாணாவில் உள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக், சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர்.

Summary

Asian Para Games: India's Ashok wins silver in weightlifting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.