தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், 15 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி....

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 11:20 am IST

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், 15 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் இடையறாத பயிற்சி, தளராத மன உறுதி, இலக்கை அடைவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு சவால்களைக் கடந்து, பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் உழைப்பும், வெற்றியும் போற்றத்தக்கது. அவர்களின் சாதனைப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

அவ்வீரர், வீராங்கனைகளின் சாதனைகள், தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனையும், இளைஞர்களின் ஆற்றலையும் உலகறியச் செய்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.

சாதனை புரிந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கும், சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும் என்றும் உறுதுணையாக இருந்து, அவர்களின் திறமைகள் மேலும் வளரவும், வெற்றிகள் பல குவிக்கவும் அனைத்து நிலையிலும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Minister Vijay congratulated the male and female athletes from Tamil Nadu who won 15 medals at the Asian Para Games held in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.