மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முதல்வர் கெம்சந்த் சிங் கூறியிருப்பதாவது...

Manipur CM Khemchand Singh
inaugurated a newly constructed guest house for people from the hill districts at Palace Compound in Imphal.

இம்பாலில் விருந்தினர் மாளிகையை திறந்து வைத்த முதல்வர் கெம்சந்த் சிங். - படம்: எக்ஸ் / மணிப்பூர் முதல்வர்

Published On :25 அக்டோபர் 2026, 11:09 am IST

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முதல்வர் கெம்சந்த் சிங் 36 இனங்களின் பிரதிநிதிகளை வைத்து ஒரு குழுவை உருவாக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் மைதேயி-குகி இனத்தவர் இடையிலான மோதல் தொடங்கிய நிலையில், முதல்முறையாக குகி ஆயுதக் குழுவினரின் முகாமை தமது கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படையினர் கொண்டு வந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் குழுவை அமைக்க இருக்கபதாக மணிப்பூர் முதல்வர் கெம்சந்த் சிங் கூறியுள்ளார்.

மாநில தலைநகர் இம்பாலில் மேரா ஹௌ சோங்பா திருவிழாவை முன்னிட்டு, அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற மலை (பழங்குடி) தலைவர்களின் விருந்தினர் மாளிகையில் முதல்வர் கெம்சந்த் சிங் பேசியிருப்பதாவது:

ஆங்கிலோ - மணிப்பூர் போரில் மணிப்பூரை காப்பற்ற அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து போராடியது. நமது மண்ணின் அடையாளம், கலாசாரத்தை காப்பாற்ற இந்த ஏழு ஆண்டுகாலப் பேரழிவில் (1819–1826) உயிர்தியாகம் செய்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.

மேரா ஹௌ சோங்பா திருவிழா அமைதியாக நடக்க வேண்டும். இதன்மூலம் மாநிலத்தில் அமைதியும் சகோதரத்துவமும் பெருக வேண்டும். மலைப் பிரதேசத்தில் இருப்பவர்களும் முன்னதாக இம்பாலுக்கு அடிக்கடி வந்தவர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ளலாம்.

விருந்தினர் மாளிகை என்பது வெறுமனே கட்டடம் மட்டுமே கிடையாது. அது மலை, பள்ளத்தாக்கு மக்களின் சகோதரத்துவத்தின் அடையாள சின்னமாக இருக்கிறது என்றார்.

Summary

Manipur to form committee comprising representatives of all 36 communities: CM Khemchand Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.