மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் இரு குழுக்களிடையே துப்பாக்கிச் சண்டை: 3 பேர் பலி

மணிப்பூரில் இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டது பற்றி....

Three killed in gunfight between rival groups in Manipur's Noney

மணிப்பூர். - File photo | ANI

Published On :1 நவம்பர் 2026, 2:28 pm IST

மணிப்பூரின் நோனேயில் இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. காலையில் கெக்ரு நாகா கிராமத்தில் தொடங்கிய இந்த சண்டை, காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் பல மணிநேரம் நீடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், குகி சமூகத்தின் உச்ச அமைப்பான குகி இன்பி மணிப்பூர் இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததுடன், இதற்கு நாகா ஆயுதக் குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தியதோடு, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதனால் நோனி மாவட்டத்தில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது.

Summary

Three people belonging to the Kuki community were killed in a gunfight between rival armed groups in Manipur's Noney district on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.