மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி; 4 பேர் காயம்

மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு பற்றி...

Suspected militants gun down man, injure 4 others in Manipur

மணிப்பூர்.(கோப்புப்படம்)

Published On :17 அக்டோபர் 2026, 8:39 pm IST

மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலியான நிலையில் 4 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், காம்ஜோங் மாவட்டத்தில் குகி இனத்தவர் வசிக்கும் சாசாட் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் சனிக்கிழமை பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, உள்ளூர் ஆயுதக் குழுவினருக்கும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலை நேரத்திலும் இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு, சாசாட் கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், அங்கு மத்தியப் படைகளை நிலைநிறுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி மேலும் கூறியதாவது, சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் கிராமத்தைத் தாக்கியதில், கிராமத் தலைவர் தாங்ஜாஹோ ஹாவ்கிப் (48), கைலுன் ஹாவ்கிப், செய்கோஹோ, ஹெகின் ஹாவ்கிப், செய்பாவோ ஹாவ்கிப் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்கோஹோ பலியானார். இந்த மாநிலத்தில் பிப்ரவரி மாதம் முதல் குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்களால் டமெங்லாங், காம்ஜோங், உக்ருல், நோனி மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Summary

A 36-year-old man was shot dead and four others were injured after suspected militants launched a gun attack at a village in Manipur's Kamjong district on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.