தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து குறித்து...

CM Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:42 pm IST

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில்,

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர்

எஸ்எல்4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும், பெண்கள் ஒற்றையர் எஸ்யு5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசன், பெண்கள் ஒற்றையர் எஸ்எச்6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ, டேபிள் டென்னிஸ் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் எம்டி4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகத்தான சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சமும், வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனைகளை படைத்துள்ளதோடு, தமிழ்நாட்டின் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளனர். இந்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணித்து, சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

Japan Para Asian Games-Greeting Winners: CM Message

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.