தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!

உலக ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து...

விஜய்

முதல்வர் சி. ஜோசப் விஜய் - படம்: டிஐபிஆர்

Published On :19 அக்டோபர் 2026, 4:15 pm IST

பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் - 2026 தொடரில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் அவர்களுக்கும், ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

இந்தப் போட்டிகளில் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருப்பதோடு, தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சாதனைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.

பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister C. Joseph Vijay has congratulated the skaters from Tamil Nadu who won medals and achieved achievements at the World Skating Games - 2026 held in Paraguay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.