மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய சாதனையுடன் 19ஆவது தங்கம்..! மீண்டும் ஒரே பிரிவில் 3 பதக்கங்கள் வென்ற இந்தியர்கள்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒரே பிரிவில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்தியர்கள் குறித்து...

Indians win all three medals in the same category

ஒரே பிரிவில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்தியர்கள் - படங்கள்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 4:22 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒரே பிரிவில் மூன்று பதக்கங்களையும் வென்று இந்தியர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்தியர்களே வென்று அசத்தியுள்ளார்கள்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் ஷைலேஷ் குமார் 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

மற்றுமொரு இந்தியர் வருண் சிங் பாடி 1.84 மீட்டருக்கு தாண்டி வெள்ளி வென்றார். ராகுல் 1.81 மீட்டருக்கு உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

நேற்று (அக்.21) குண்டு எறிதலில் இந்தியர்கள் மூன்று பதக்கங்களையும் வென்றிருந்தார்கள். தற்போது, மீண்டும் மூன்று பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

இத்துடன் இந்தியாவுக்கு 19 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கலம் என 84 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இத்துடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்துக்கு கீழிறக்கியுள்ளது.

Summary

India sweeps men's high jump T63 event in Para Asiad with Shailesh Kumar, Varun Bhati and Rahul winning gold, silver and bronze respectively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.