மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு 18ஆவது தங்கம்..! ஒரே பிரிவில் 2 பதக்கம் வென்ற வீராங்கனைகள்!

ஆசிய பாரா விளையாட்டில் ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள் குறித்து...

Indian athletes who won gold and silver

தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள் - படங்கள்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 3:06 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தியுள்ளார்கள். இது இந்தியாவுக்கு 18ஆவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மகளிருக்கான 400 மீட்டர் டி47 பிரிவில் இந்தியாவின் அஞ்சனாபென் பும்பாடியா தங்கமும் மற்றுமொரு இந்திய வீராங்கனை ஜெயந்தி பஹீரா வெள்ளியும் வென்றார்கள்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் அஞ்சனாபென் பும்பாடியா 59. 97 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடம் பிடித்தார். மற்றுமொரு இந்திய வீராங்கனை ஜெயந்தி பஹீரா 1:00.65 விநாடிகளில் இலக்கைக் கடந்து இரண்டாமிடம் பிடித்தார்.

தாய்லாந்தின் சசிரவன் இன்தாசோட் 1:02.65 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலம் வென்றார்.

டி47 என்பது முழங்கைக்குக் கீழே கை துண்டிப்பு, மணிக்கட்டு துண்டிப்பு, அல்லது ஒரு கையைப் பாதிக்கும் அதுபோன்ற மேற்கைக் குறைபாடு/பாதிப்பு உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பிரிவைக் குறிக்கும். இதில்தான் இந்திய வீராங்கனைகள் 2 பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

இத்துடன் இந்தியாவுக்கு 18 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் உடன் 78 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது.

Summary

India's 18th gold..! Anajanben Bumbadiya strikes gold in women's 400m T47; silver for Jayanti Behera

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.