மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையுடன் இரட்டைத் தங்கம் வென்ற மோனா அகர்வால்!

ஆசிய பாரா விளையாட்டில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை மோனா அகர்வால் குறித்து...

Indian athlete Mona Agarwal sets world record

உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை மோனா அகர்வால் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 1:32 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 27ஆவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பாரா துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் ஆர்8 - மகளிருக்கான 50மீ ரைபிள் 3 பொசிஷன் எஸ்ஹெச்1 பிரிவில் இறுதிப் போட்டியில் 357.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

அத்துடன் இந்தப் பிரிவில் இதுதான் உலக சாதனை என்பதும் கூடுதல் சிறப்பானது. இத்துடன் நடப்பு எடிஷனில் மோனா அகர்வாலுக்கு இது இரண்டாவது தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன வீராங்கனை குய்பி ஜாங் இந்திய வீராங்கனையை விட 3.8 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றுமொரு இந்திய வீராங்கனை அவனி லேகரா சில புள்ளிகளில் நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இத்துடன் இந்தியாவுக்கு 27 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளன. இன்று ஒரே நாளில் மட்டுமே இந்தியாவுக்கு இது ஆறாவது தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Mona Agarwal wins double gold in shooting with world record! India's 26th gold!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.