மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்

Published On :31 அக்டோபர் 2026, 2:05 pm IST

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வரவேற்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரம், இந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வை நடத்துவதென்றும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

அதே சமயம், இதன் ஆய்வு வரம்புகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.

இதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் ஆணையம் தன் பணியைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றால் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொணரவும், அதனடிப்படையில் சமூக - பொருளியல் நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

எனவே, இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Caste-based census: CPM welcomes the Tamil Nadu government's decision!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.