மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!

பங்குகள் வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடியை திரட்ட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 3:27 am IST

பங்குகள் வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடியை திரட்ட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் (நிதித்துறை) வெளியிட்ட அறிவிப்பு:

7.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்- 2041 மூலம் ரூ. 2,500 கோடி மறுவெளியீடு, 8.14 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2046 மூலம் ரூ.2,500 கோடி மறுவெளியீடு, 8.21 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2051 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு மற்றும் 8.18 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2056 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசா்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் அக்.27-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் அக்.27-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu government raises Rs. 9,000 crore through bonds

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.