மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழனி பஞ்சாமிர்தம்! வாழைப்பழத்துக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் வழங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியது குறித்து...

பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் வழங்க தமிழக அரசு டெண்டர் - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 11:59 am IST

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப் பழம் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்புசர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

மலைவாழைப்பழத்தால் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு, அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும்.

இந்த நிலையில், பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கான வாழைப் பழங்கள் கொள்முதல் செய்வதற்கு அரசு டெண்டர் கோரியுள்ளது.

இதன்படி, அடுத்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குப் பிரிவுக்குத் தேவையான வாழைப் பழங்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ரூ. 1 கோடி முன் வைப்புத்தொகையுடன் ஒப்பந்தக் காலம் முழுவதும் ஒப்புக்கொண்ட விலையில் மட்டுமே வாழைப் பழங்களை வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26 ஆம் தேதிக்குள் டெண்டரை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has invited tenders for the supply of bananas for the production of Pazhani Panchamirtham

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.